முல்லைத்தீவில் வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்! இரு பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறையின் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும்
நேற்று (16) வியாழக்கிழமை மாலை இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, இரவு சுமார் 11.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதலின் போது வீட்டின் கூரையை உடைத்து உள்நுழைந்த கும்பல், வீட்டின் கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பெறுமதியான மரத் தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.




Post a Comment