பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கிடங்கு மீது ஈரான் தாக்குதல்
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஆளில்லா வான்வழி வாகனங்கள் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது .
அதே அறிக்கையில், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி பஹ்ரைனின் பிரதான செயற்கை நுண்ணறிவு மையத்தை அழித்ததாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.
பஹ்ரைனைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை, சமீப நாட்களாக ஈரானால் குறிவைக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய தாக்குதல் குற்றச்சாட்டு குறித்து பஹ்ரைன் பாதுகாப்புப் படையும் (BDF) அமெரிக்க இராணுவமும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

Post a Comment