ஈரான் மீது 6வது இரவாக அமெரிக்கா தாக்குதல்களை நடத்துகிறது!
கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், ஈரானுக்கு எதிராக புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது தொடர்ச்சியாக ஆறாவது இரவாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், அமெரிக்கப் படைகள் ஒரு பாலம், ஒரு ரயில் நிலையம் மற்றும் பல இடங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெஹ்ரானின் இராணுவத் திறன்களை மேலும் சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தாக்குதல்களில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை தெற்கு ஈரானில் அமைந்துள்ள பந்தர் கமீர் நகரில் உள்ள ஒரு பாலம் மற்றும் ஈரான்ஷார் விமான நிலையம் ஆகியவற்றை அமெரிக்கத் தாக்குதல்கள் தாக்கியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அஹ்வாஸ் நகரமும், கெஷ்ம் தீவும் தாக்கப்பட்டன. விமான நிலையத்தைச் சுற்றி மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், தென்கிழக்கில் உள்ள ஈரான்ஷாஹர் விமான நிலையத்தை குறைந்தது ஒரு அமெரிக்க எதிரி ஏவுகணை தாக்கியதாகவும் அரசு தொலைக்காட்சி IRIB டெலிகிராமில் தெரிவித்துள்ளது.
ந்தர் அப்பாஸ் ரயில் சந்திப்பு நிலையம் மீது அமெரிக்கத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் பகுதி அரசு செய்தி நிறுவனமான YJC நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாக்குதலில் இருவர் காயமடைந்தனர்.
கடந்த சில நாட்களாக, தெற்கில் உள்ள பந்தர் அப்பாஸ் நகரம் அமெரிக்கத் தாக்குதல்களால் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டு வருகிறது.

Post a Comment