பிரெஞ்சு தூதர்களுக்கு எதிரான ஈரானின் ஆக்கிரமிப்பை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளது


கடந்த 19 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் இரண்டு தூதர்களுக்கு எதிராக ஈரானிய பாதுகாப்புப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் திட்டவட்டமாகக் கண்டிக்கிறது என்று கஜா கல்லாஸ் கூறினார்.

இத்தகைய செயல்கள் வியன்னா உடன்படிக்கைகளின் அப்பட்டமான மீறலாகும். மேலும் அவை தூதரக உறவுகளின் நடத்தையையே சீர்குலைக்கின்றன என்று அவர் மேலும் கூறினார். கல்லாஸ், 1961 ஆம் ஆண்டு தூதரக உறவுகள் மீதான வியன்னா உடன்படிக்கையைக் குறிப்பிட்டார். 

தங்கள் தூதர்கள் ஈரானில் எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஈரானிய பாதுகாப்பு சேவைகளால் மிகவும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் உடல்ரீதியாகத் தாக்கப்பட்டதாகவும் பிரான்ஸ் கூறியுள்ளது. 

தன் பங்கிற்கு ஈரானின் வெளியுறவு அமைச்சகம், தூதர்களின் நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக நேற்றுத் திங்களன்று பிரெஞ்சு தூதரை அழைத்ததாகத் தெரிவித்தது.  

No comments