உயிரிழந்த அயதுல்லா அலி கமேனிக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான பல நாள் இறுதி மரியாதை நிழக்வுகள் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்று வருகிறது.
இன்று சனிக்கிழமையன்று இமாம் கொமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உடற்பேளைகள் பார்வைக்கு வைக்கப்பட்டபோது அவரது இறுதி அஞ்சலிக்காக பெரிய மசூதியின் முன் திடலில் திரண்டனர்.
கமெனியைக் குறிக்கும் ஒரு காலி நாற்காலி ஈரானியக் கொடிகளால் சூழப்பட்டு மையத்தில் நின்றிருந்தது. மேலும் அவரது கருப்புத் தலைப்பாகை அவரது உடற்பேளைக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்திய அந்தத் தலைவர், பிப்ரவரி 28 அன்று அவரது தெஹ்ரான் வளாகத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதில், தனது குடும்ப உறவினர்களுடன் கொல்லப்பட்டார்.
அவருடைய மகன் மொஜ்தபா கமெனி வாரிசாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அமொிக்கா இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கிய முதல் அவர் பொதுவெளியில் காணப்படவில்லை. அவரைக் கொன்றுவிடுவதாக இஸ்ரேல் விடுத்த அச்சுறுத்தல்கள் காரணமாக, அவர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வது சாத்தியமில்லை எனக் கருதப்படுகிறது.
தாக்குதல்களில் கொல்லப்பட்ட மொஜ்தபாவின் மறைந்த மனைவி மற்றும் மேலும் இரண்டு குடும்ப உறுப்பினர்களின் உடற்பேளைகளும், அவரது தந்தையின் உடற்பேளையுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமையன்று மஸ்ஜிதுல் ஹராம் பெருமசூதியில் கூடியிருந்த கூட்டத்தினரிடையே, "அமெரிக்கா ஒழிக" மற்றும் எங்கள் வாக்கு ஒன்றே! பழிதீர்! பழிதீர்" உள்ளிட்ட கோஷங்கள் ஒலித்தன.


Post a Comment