உதயநிதி ஸ்டாலினுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்!


யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட ஏழு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். 

No comments