கறுப்பு ஜூலை வேதனை எங்கள் மனங்களில் இன்றும் இருக்கின்றன - புத்த சாசன அமைச்சர்
கறுப்பு ஜூலை வேதனை எங்கள் மனங்களில் இன்றும் இருக்கின்றன என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் செய்த அமைச்சர் , மருதனார்மடத்தில் வீதியொன்றின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் பல்வேறு காரணங்களுக்காக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் நங்கள் அரசாங்கம் என்ற வகையில் எவ்வளவு திறந்த மனதுடன் வடக்கை அபிவிருத்தி செய்யத் தேவையான நிதிகளை ஒதுக்கியுள்ளோம்.
இன்று ஜூலை 23, 'கருப்பு ஜூலை' நினைவுகூரப்படும் நாள். இது குறித்த வேதனை எங்களின் அனைவரின் மனதிலும் இன்னும் இருக்கிறது.
யாழ்ப்பாணப் பொது நூலகத்தைப் பார்வையிடவுள்ளேன். யாழ். நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்ப வரவு செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளோம்.
தயவுசெய்து போராட்டம் நடத்தி மக்களை திசை திருப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அரசாங்கத்தின் நோக்கம், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதே அதற்காக நாங்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம்,
வடபகுதி மக்கள் எம்மீது அன்பு காட்டியுள்ளனர். அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மூவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
எனவே, வடக்கு மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம் என தெரிவித்தார்.

Post a Comment