மாகாணசபை தேர்தல் ஒதுக்கீடு திரும்பியது!



மாகாணசபை தேர்தல் இவ்வாண்டிலும் நடைபெறுவது சந்தேகமாகவே உள்ளது.

கடந்த ஆண்டில் மாகாண சபை தேர்தல்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 9,000 மில்லியன் ரூபாய் நிதி தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படாததன் காரணமாக குறித்த நிதி இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு ரூ. 12,487 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது, அதில் ரூ. 12,278 மில்லியன் தொடர் செலவினத்திற்காகவும், ரூ. 209 மில்லியன் மூலதனச் செலவினத்திற்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

No comments