தமிழரசுக்கு கதிரை மோகம்:கஜேந்திரகுமார்!




அதிகாரத்தை எந்த வழியிலாவது கைப்பற்றும் அரசியல் கலாசாரத்தையே தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைமையினர் பின்பற்றுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை "ஒற்றுமை" குறித்து பேசும் அரசியல் தரப்புகள், தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கே பின்னால் குத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவிததுள்ளார்.

சாவகச்சேரி நகர சபையின் புதிய உப தவிசாளர் தெரிவில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசியப் பேரவையின் நிலைப்பாட்டின்படி தேர்தல் நடைபெறக் கூடாத ஒன்றாக இருந்ததாக தெரிவித்தார்.

முன்னாள் உப தவிசாளர் கிசோர் ஜனநாயக விரோதமான முறையில் ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும், அதனால் புதிய உப தவிசாளர் தெரிவை நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், தமிழரசுக் கட்சியினர் தேர்தலில் பங்கேற்கத் தீர்மானித்ததால், தேர்தல் நடைபெறுவது உறுதியாகிய நிலையில், தமிழ் தேசியப் பேரவையும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கூட்டத்தில் கலந்துகொண்டு மாற்று வேட்பாளரை நிறுத்தியதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


No comments