பங்கேற்க மாட்டேன்:சுமந்திரன்!



யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை பெருமெடுப்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனியில் தான் பங்கெடுக்க போவதில்லையென எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். 

அந்த நடைபவனிக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.எனினும் பல தரப்புக்களது எதிர்ப்பினையடுத்து தனது பங்கெடுப்பினை சுமந்திரன் கைவிட்டுள்ளார்

 நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளக் கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்து பழைய மாணவர்கள் இன்றையதினம் பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், 150வது ஆண்டு விழா என்பது ஒருமுறையே வரும். அது தொடர்பான நிகழ்வுகளுக்கு எமது பழைய மாணவர்கள் யாரையாவது விருந்தினராக அழைக்கப்பட வேண்டும். பாடசாலைக்கு தொடர்பில்லாத ஒருவர் விருந்தினராக வருவதை ஏற்றுகொள்ள முடியாதென விளக்கமளித்துள்ளனர்.


No comments