வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு - யாழில் ஆகஸ்ட் 30ஆம் திகதி


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. 

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற குறித்த கலந்துரையிடலில் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் , அரசியல்வாதிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் , மத தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவிக்கையில், 

 எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் போராடி வருகின்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் , யாழ்ப்பாணம், தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம்.

இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவற்கோ, நீதியைப் பெற்றுத்தருவதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகள் இல்லை, சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலியுறுத்தவுள்ளதாக  தெரிவித்துள்ளனர். 

No comments