கொழும்பில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு


கொழும்பு கடுவல, நவகமுவ – வந்துராமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்தையடுத்து அவர் அவசரமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பின்னணியைக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைத்துப்பாக்கி ஒன்றைப் பயன்படுத்தியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர்களைக் கைது செய்வதற்காக நவகமுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments