ஈரான் மீது பதிலடியைத் தொடங்கியது இஸ்ரேல்!!


இஸ்ரேல் மீதான ஈரான் நடத்திய தாக்குதல்களை எச்சரிக்கை தாக்குதல்கள் என தெஹ்ரான் கூறியதற்குப் பதிலடியாக, இஸ்ரேலிய இராணுவம் இன்று திங்களன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள ஈரானியஆட்சியின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தலைநகர் தெஹ்ரான், அத்துடன் தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் தனது தாக்குதலில் வான்வழி பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பு அதிகாரிகளின் தகவல்படி, திங்கள்கிழமை காலை தென்மேற்கு ஈரானில் உள்ள ஒரு பெட்ரோலிய வேதியியல் ஆலை மீது இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின.

ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி, மஹ்ஷஹர் நகருக்கு அருகிலுள்ள கருண் பெட்ரோ கெமிக்கல் ஆலை தாக்கப்பட்டு பகுதியளவு சேதமடைந்துள்ளதாக ஃபார்ஸ் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

No comments