யேர்மனியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி!


யேர்மனியின் ஹம்பேர்க் நகரிக்கு மேற்கே அமைந்துள்ள ஸ்டேட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்தனர்.

ஆண் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக  காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தாக்குதலானது நகர மையத்தில் உள்ள இளைஞர் மையம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

டான்கர்ஸ்ட்ராஸ் தெருவில் ஒரு "பெரிய நடவடிக்கை" நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் அப்பகுதியை விட்டு விலகி இருக்குமாறும், சம்பவ இடத்தில் உள்ள அவசரகால சேவைகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டு, மாநில காவல்துறை வாட்ஸ்அப்பில் பகிர்ந்த ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்டேட் நகரில் சுமார் 50,000 மக்கள் வசிக்கின்றனர். 

No comments