அருச்சுனா ஒரு ஜோக்கர் - இளங்குமரன் எள்ளல்


நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் அவரை பற்றி கதைக்க வேண்டியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். 

கோப்பாய் பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் , இளங்குமரனிடம் , களுத்துறையில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்சேவின் பாராட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்  அருச்சுனா இராமநாதன் கலந்து கொண்டமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மஹிந்த தரப்பை சேர்ந்தவர் என நாம் முதலே தெரிவித்தோம். தற்போது அவர் வெளிப்படையாகவே மஹிந்த தரப்பின் நிகழ்வில் பங்கேற்றுள்ளார் 

அவர் ஒரு ஜோக்கர், அவரை பற்றி கதைப்பதற்கு எதுவும் இல்லை என இளங்குமரன் மேலும் தெரிவித்தார்.

No comments