பல வருடங்கள் கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்


மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா, மருத்துவமனையில் காலமானார் என அரச அரண்மனை வெள்ளிக்கிழமை அறிவித்தது. அவருக்கு வயது 47.

இளவரசி வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது என்றும் அரண்மனை தெரிவித்தது.

பஜ்ரகிதியாபா, தாய்லாந்து மன்னரான மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் ஆவார் .

2022 டிசம்பரில், வடகிழக்கு மாகாணமான நக்கோன் ராட்சசிமாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, ​​இதய நோய் காரணமாக இளவரசி திடீரென சுயநினைவை இழந்தார். 

சிகிச்சைக்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் பாங்காக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அன்று முதல்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் வியாழக்கிழமை மாலை அமைதியாகக் காலமானார் என அரண்மனை தெரிவித்தது.

அவரது உடல் பாங்காக்கில் உள்ள கிராண்ட் பேலஸில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அரச பாரம்பரியத்தின்படி மிக உயர்ந்த மரியாதைகளுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அரச அரண்மனை தெரிவித்துள்ளது.

தாய்லாந்து அரசாங்கம் தேசிய துக்க காலத்தை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments