இடையூறு விளைவித்தவர்கள் விபரம் நீதிமன்றில்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர்; மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதா, இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட விசேட மனநல தடயவியல் மருத்துவக் குழுவொன்றைக்கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நியமித்துள்ளது.
அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள விசேட மருத்துவக் குழு, இது குறித்த தனது விரிவான மருத்துவ அறிக்கையை எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிமன்றத்தினால் இந்த விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு ஆதரவாகக் கொழும்பு கோட்டையில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாகப் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு போராட்டம் மூலம் இடையூறு விளைவித்தவர்கள் விபரம் நீதிமன்றில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது.அப்பட்டியலில் விமல் வீரவன்ச,உதய கம்மன்பில,டிரான் அலஸ் மற்றும் சரத் வீரசேகர உள்ளிட்ட பலரது பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment