அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளே?
யுத்த இறுதிக்காலப்பகுதியான 2008 -2009 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில்; கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். அவரை ஜூன் 27 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை கொழும்பு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கோத்தபாயவிற்காக கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களை அட்மிரல் வசந்த கரன்ன மற்றும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோரே முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் மாறி மாறி பதவியேற்ற ஆட்சியாளர்களினால் காப்பாற்றப்பட்டு வந்திருந்த நிலையில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஜூன் 27 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை கொழும்பு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலையில் கடற்படை இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சர்வதேச கவனத்தை பெற்றிருந்த கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்தான கடத்தல் விவகாரத்தை தற்போது இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் கைகளில் எடுத்துள்ளனர்.

Post a Comment