சொல்லிசை பாடகரை விடுவி - வவுனியாவில் போராட்டம்


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, வவுனியாவில் இன்றைய தினம் திங்கட்கிழமை கண்டன கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஆரம்பமான இப்போராட்டத்தை வவுனியா மாவட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். 

இதில் அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

பழைய பேருந்து நிலைய பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தி வரை பேரணியாகச் சென்றனர். 

பின்னர் மீண்டும் போராட்ட இடத்தை வந்தடைந்து தமது கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.






No comments