விஜய்க்கு 120 இடங்கள் கிடைத்தது: ஐ.யூ.எம்.எல். கட்சியின் ஆதரவு!!
விடுதலைச் சிறுத்தைகள் விஜய்க்கான ஆதரவை வழங்கியத்தைத் தொடர்ந்து தற்போது ஐ.யூ.எம்.எல். கட்சியும் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஐ.யூ.எம்.எல். கட்சியின் ஆதரவு கடிதத்தை த.வெ.க. நிர்வாகிகள் செங்கோட்டையன், அருண்குமார் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். இதன் மூலம் த.வெ.க.வின் ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய், கவர்னரை சந்தித்து ஆதரவு எண்ணிக்கையை காண்பித்து ஆட்சியமைப்பதற்கான உரிமையை கோர உள்ளார். கவர்னர் ஆட்சியமைக்க அழைக்கும் பட்சத்தில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தமிழக ஆளுநர் இன்று மாலை கேரளா செல்லவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Post a Comment