4 போர்க்கப்பல்களை பிரான்சிடம் இருந்து வாங்குகிறது சுவீடன்
சுவீடன் அரசாங்கம் , தனது கடற்படைக்காக நான்கு புதிய போர்க்கப்பல்களை பிரான்சின் நேவல் குரூப் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
2030-ஆம் ஆண்டிற்குள் முதல் கப்பலும், அதைத் தொடர்ந்து 2035-ஆம் ஆண்டிற்குள் மீதமுள்ள மூன்று கப்பல்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பலில் பொருத்தப்பட்டுள்ள துல்லியமான ஆயுத அமைப்புகளைப் பொறுத்து, ஒவ்வொரு கப்பலுக்கும் 10 பில்லியன் ஸ்வீடிஷ் குரோன்களுக்குச் சற்று அதிகமாக (தோராயமாக €0.9 பில்லியன் அல்லது $1.05 பில்லியன்) செலவாகும் என்றும், இதன் மொத்தச் செலவு €3.5 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் ஸ்வீடன் எதிர்பார்க்கிறது. இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் மதிப்பீடுகளே என்று அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
சாப் நிறுவனம் உட்பட, ஸ்வீடனில் உருவாக்கப்பட்ட பல ஆயுதங்களைக் கப்பல்களில் பயன்படுத்தும் வகையில் அவற்றை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் கோரியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன் தெரிவித்தார்.

Post a Comment