நீச்சல் தடாகத்தில் நீரில் மூழ்கி மரணம்!



வல்வட்டித் துறை நகரசபைக்கு சொந்தமான நீச்சல் தடாகத்தில் நீரில் மூழ்கி 16 வயது மதிக்கத்தக்க சிறுவன்  உயிரிழந்துள்ளான். 

குறித்த நீச்சல் தடாகத்தின் கழிவு நீரை வெளியேற்றும் பகுதி பைப்புக்குள் அகப்பட்டதால் குறித்த சிறுவன் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

குறித்த  நீச்சல் தடாகத்தில் கழிவு நீரை வெளியேற்றுவதற்காக மோட்டார் போடப்பட்ட நிலையில் பாதுகாப்பற்ற குழாய்க்கு அருகாமையில் சிறுவன் நின்றதால் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 


No comments