போலந்திற்கு கூடுதலாக 5,000 அமெரிக்கப் படைகள்: நேட்டோ வரவேற்பு!


போலந்திற்கு 5,000 துருப்புகளை அனுப்புவது குறித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் அறிவிப்பைத்  தாம் வரவேற்பதாக நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே கூறினார் . 

ஸ்வீடனில் நடைபெறவுள்ள நேட்டோ கூட்டணியின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ரூட்டே கூறினார்.

தனது நட்பு நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் நோக்கில், போலந்திற்கு 5,000 துருப்புகளை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். 

போலந்தின் தற்போதைய ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கியின் வெற்றிகரமான தேர்தல் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா போலந்திற்கு கூடுதலாக 5,000 துருப்புகளை அனுப்பும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் எழுதியிருந்தார்.

ஆனால், போலந்திற்கு ஒரு படைப்பிரிவு (4,000 முதல் 4,700 வீரர்கள்) அனுப்புவதை நிறுத்தி வைப்பதாக பென்டகன் அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த முடிவு டிரம்ப் அறிவித்துள்ளார்.

டிரம்பின் அறிவிப்பின்படி, அந்தப் படைப்பிரிவு போலந்திற்கு மீண்டும் அனுப்பப்படுமா, அந்த சுழற்சி முறையிலான நிலைநிறுத்தத்திற்கு மேலாகக் கூடுதல் துருப்புக்கள் சேர்க்கப்படுமா, அல்லது ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கத் துருப்புக்கள் வேறு ஒரு நாட்டிலிருந்து குறைக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.  

மே மாத தொடக்கத்தில் ஜெர்மனியில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக டிரம்ப் கூறினார். ஐரோப்பியக் கண்டத்தின் பாதுகாப்பிற்கான முதன்மைப் பொறுப்பை அமெரிக்காவிடமிருந்து ஐரோப்பா ஏற்கும் என நம்புவதாக டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

No comments