சீனாவில் வெள்ளப்பெருக்கு: மூவர் பலி! 17 பேரைக் காணவில்லை!
தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகராட்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாகவும், 17 பேரைக் காணவில்லை எனவும் சீனாவின் அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை சோங்கிங்கின் யோங்சுவான் மாவட்டத்தில் திடீரெனப் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணி (0630 GMT) நிலவரப்படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது என்று சின்ஹுவா கூறியது.

Post a Comment