மறைந்த மாஃபியாவின் 200 மில்லியன் யூரோக்களை பறிமுதல் செய்கிறது இத்தாலி


பல்வேறு வெளிநாட்டுப் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையின்போது, ​​மறைந்த மாஃபியா தலைவர் மேட்டியோ மெசினா டெனாரோவுக்குச் சொந்தமான 200 மில்லியன் யூரோக்களுக்கும் (232 மில்லியன் அமெரிக்க டாலர்) அதிகமான மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்வதாக இத்தாலி இன்று அறிவித்தது.

30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து 2023-ல் பிடிபட்டு, அதே ஆண்டில் சிறையில் உயிரிழந்த மத்தேயோ மெசினா டெனாரோவின் நலன்களுக்காக, 1980-களில் இருந்து இந்தச் சொத்துக்கள் குவிக்கப்பட்டிருந்ததாக காவல்துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அன்டோரா, கேமன் தீவுகள், ஜிப்ரால்டர், லெபனான், லக்சம்பர்க், மொனாக்கோ, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

No comments