தவிசாளர் தலைமையில் பேரணி?
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நடத்திய முள்ளிவாய்யக்கால் பேரணி சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
அனுமதியின்றி நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணியில் ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான முறையில் பயணித்த குழுவினரை காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, முல்லைத்தீவு பொலிஸார் மூவர் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் தெரிவித்ததாவது, சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்களை அடையாளம் காண சிரமம் ஏற்பட்டதால் விசாரணைக்கு காலதாமதம் ஏற்பட்டது. எனினும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
ஆபத்தான வாகன ஓட்டம் மற்றும் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Post a Comment