தமிழரசுக் கட்சி : கஞ்சி !
தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று கட்சியின் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.எ.சுமந்திரன் மற்றும்பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், து.ரவிகரன், ஞா.சிறிநேசன், க.கோடீஸ்வரன், இ.சிறிநாத், இரா.சாணக்கியன், பிரதேச சபைகளின் தவிசாளர்களான பா.பாலேந்திரன், தி.கிருஸ்ணவேணி உட்பட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள்,தொண்டர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment