வலிவடக்கில் மீண்டும் கவனயீர்ப்பு!



வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 36வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் மீண்டும் பெருமெடுப்பிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் (22) ஐந்தாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்த போதே போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் 25ம் திகதி முதல் வெசாக் தினம் வரை உயர்பாதுகாப்பு வலய முகாம்பகுதி முழுவதும் கருப்பு கொடிகள் பறக்க விடப்பட்டு பாரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வலிகாமம் வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அரசினால் பேணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், வலிகாமம் வடக்கின் பெரும் பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாகவே பேணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.


No comments