தாக்குதல்களை இடைநிறுத்தினார் டிரம்ப்: 2 வாரபோர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது ஈரான்
ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீண்டும் திறக்க தெஹ்ரான் ஒப்புக்கொண்டால், தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது .
ஒரு ஒப்பந்தத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்கவும், ஈரான் அந்த முக்கிய நீர்வழியை முழுமையாகத் திறக்கவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபரிடம் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த அறிக்கை வெளியானது.
பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாக ஈரானின் 10 அம்சத் திட்டத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஈரானுக்குத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஈரான் அமெரிக்கத் தரப்புடன் இஸ்லாமாபாத்தில் இரண்டு வாரங்களுக்கு, இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தும் என உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இது போரின் முடிவைக் குறிக்காது என்றும், 10 அம்சத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகளை ஈரான் ஏற்றுக்கொள்வதோடு, அதன் விவரங்களும் பேச்சுவார்த்தைகளில் இறுதி செய்யப்பட்டால் மட்டுமே ஈரான் போரின் முடிவை ஏற்கும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கும். ஈரான் அமெரிக்காவை நம்பவில்லை, மேலும் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்காக இரண்டு வாரங்களை ஒதுக்கும். இரு தரப்பினரின் உடன்பாட்டின் பேரில் இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்.
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்படும்" என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
இரண்டு வார காலத்திற்கு, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஈரானின் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து, தொழில்நுட்ப வரம்புகளை உரிய முறையில் கருத்தில் கொண்டு இது நடைபெறும்" என்று அவர் கூறுகிறார்.
போர் நிறுத்தத்தில் இஸ்ரேலும் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான போதிலும், ஈரான் தங்கள் மீது மேலும் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்களை இடைமறிக்க பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன என்று அது தெரிவித்தது.
ஈரானின் தேசிய தொலைக்காட்சி ஒன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் 10 அம்சக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும், அது அந்நாட்டிற்கு ஒரு வெற்றி என்றும் கூறியுள்ளது.

Post a Comment