பேச்சுவார்த்தை நடத்தவே ஈரானியர்கள் உயிருடன் இருக்கிறார்கள் - டிரம்ப்


ஈரானியர்களிடம் வேறு எதுவும் இல்லை என்று உணரவே அவர்கள் மறுக்கிறார்கள். சர்வதேச நீர்வழிகளை பயன்படுத்தி உலக நாடுகளை குறுகிய காலத்திற்கு மிரட்டலாம் என்பது தவிர்த்து, அவர்களிடம் வேறு எதுவும் இல்லை என குறிப்பிட்டார்.

அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர்கள் இன்று உயிருடன் இருக்கிறார்கள் என தெரிவித்து உள்ளார். போரை விட, பொய் செய்தி ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றை கையாள்வதில் ஈரான் அரசு நிர்வாகத்தினர் சிறந்தவர்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டால், ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது. அதற்காக சிறந்த ஆயுதங்கள் காத்திருக்கின்றன என எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாங்கள் இதுவரை தயாரிக்கப்படாத சிறந்த வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் ஏற்றி கொண்டு கப்பலில் தயாராக இருக்கிறோம். இதற்கு முன் நடந்த தாக்குதலை விட தீவிர தாக்குதலாக அது இருக்கும். அவற்றை வெடிக்க செய்வோம் என்றும் மிரட்டலாக கூறியுள்ளார்.

No comments