கஞ்சா கடத்தும் இலங்கைபொலிஸ்!
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு இலங்கைப்பொலிஸாரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக 1 கிலோ 970 கிராம் கஞ்சாவினை கொண்டு சென்ற வேளை இரு இலங்கைப்பொலிஸாரையும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்த கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட இருவரும் சாய்ந்தமருது மற்றும் மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment