புத்தாண்டு தினத்தில் மகாவலி கங்கையில் நீராடிய சகோதரர்கள் மூவர் மாயம்


மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். 

புத்தாண்டு தினமான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.

 இவ்வாறு நீரில் மூழ்கியவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களாவர். 

காணாமல் போனவர்களை தேடும் பணியில் கடற்படை உயிர்காப்புப் பிரிவினரும் சேருநுவர பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். 

No comments