கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து - பணி முடித்து வீடு திரும்பிய இரு இளைஞர்கள் உயிரிழப்பு


கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். 

குறித்த விபத்தில் , தியாகராசா விக்னேஸ்வரன் (வயது 18) மற்றும் ஜெரின் கனிஸ்டன் (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். 

தர்மபுரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் குறித்த இரு இளைஞர்களும் , நேற்றைய வெள்ளிக்கிழமை இரவு பணி முடித்து மோட்டார் சைக்கிளில் தமது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை முன்னால் சென்ற கனரக வாகனத்துடன் மோதி சம்பவ இடத்திலையே இருவரும் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்த இருவரதும் சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ,  விபத்து தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

No comments