வவுனியாவும் விசாரணைக்குள்ளாம்!
வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி சாரடபு பருத்தித்துறை நகரசபைத் தவிசாளரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னரே நீதிமன்றம் தடை உத்தரவை வழங்கியுள்ளது.
இதனிடையே வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
வவுனியா மாநகர சபையின் நிர்வாகச் சீரின்மை, அதிகார துஸ்பிரயோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் தூர்வாருதலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆழமாக ஆராய்வதற்காக, ஆளுநரால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கந்தையா அரியநாயகம் அவர்கள் தனிநபர் விசாரணை ஆணைக்குழுவாக நியமிக்கப்பட்டிருந்தார்.
விசாரணை ஆணைக்குழுவின் விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் அவர்கள் கட்டளையிட்டுள்ளார்:
ஆளுநரால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுமையான அறிக்கையை இரண்டு வார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறும் உள்ளூராட்சி ஆணையாளரால் வவுனியா மாநகர சபை ஆணையாளருக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment