மீனவரிற்கு கடற்படை சித்திரவதை!



மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் தமிழ் மீனவர் ஒருவரை கடற்படை புலனாய்வு பிரிவினரால்  கைது செய்யப்பட்டு சித்திரவதைகளிற்குள்ளாகியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகயில் பெர்துமக்கள் முன்னிலையில் முழங்காலில் இரண்டு மணித்தியாலம் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளதாக இன்று புதன்கிழமை (09) மனித உரிமை ஆணைக்குழுவிடம் பாதிக்கப்பட்ட மீனவர் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை செட்டிபாளையம் கடலில் மீன்பிடிப்பதற்காக தயாராகிக்கொண்டிருந்த மீனவர் நந்தீசன் என்பவரையே சிவில் உடையில் சென்ற கல்லடி கடற்படை முகாமில் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் கைது செய்துள்ளனர்.

பின்னர் மீனவரை களுதாவளை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அங்கு வைத்திருந்த பின்னர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவினரின் தாக்குதலுக்கு உள்ளான மீனவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள மீனவர் தனக்கு நீதி வேண்டும் என கோரியும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.


No comments