சொத்து மதிப்பு சுமார் ரூ. 990 பில்லியன்!
இலங்கையில் அரங்கேறிய பாரிய வங்கி மோசடியை தொடர்ந்து வங்கி மேலாளர் உட்பட பலரை, வங்கியின் உள்ளகப் பணச்சலவை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மோசடி வங்கியின் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டுப் பகுதிக்குள் மட்டுமே நிகழ்ந்ததாகவும், இதில் பல ஊழியர்கள் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் கண்டறியப்பட்ட உடனேயே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்படடுள்ளனர்.
மோசடியால் ஏற்படக்கூடிய இழப்பு சுமார் ரூ. 4.0 பில்லியன் என வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், வங்கியானது 2025 ஆம் ஆண்டிற்கான நிகர லாபமாக ரூ. 11 பில்லியன் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், மார்ச் 31, 2026 நிலவரப்படி அதன் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 990 பில்லியனாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Post a Comment