இரண்டாவது எஃப்-35 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது


அமெரிக்காவின் எஃப்-35 ரக மறைமுகப் போர் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஈரானிய வான்வெளியில் பறந்த அந்த ஜெட் விமானம், ஒரு புதிய, மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஐ.ஆர்.ஜி.சி மேலும் தெரிவித்தது.

அமெரிக்காவிடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. 

போர் தொடங்கியதிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டாவது எஃப்-35 விமானம் இது என்று ஐ.ஆர்.ஜி.சி. கூறியது.

அமெரிக்கப் போர் விமானங்களை வெற்றிகரமாக வீழ்த்தியதாக ஈரான் வெளியிட்ட அறிக்கைகளை, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) முன்னதாக நிராகரித்துள்ளது.

No comments