F-35 மீதான தாக்குதல்: அமெரிக்க ஆணவத்தின் மீதான தாக்குதல் - ஈரான் சபாநாயர்


F-35 தாக்குதல் ஒழுங்கு சீர்குலைந்த தருணம்'என்கிறார் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்.

அமெரிக்காவின் எஃப்-35 போர் விமானம் தாக்கப்பட்டது என்பது ஒரு ஒழுங்கின் வீழ்ச்சிக்கான தருணம் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறியுள்ளார்.

எஃப்-35 வெறும் ஒரு போர் விமானம் மட்டுமல்ல, அது அமெரிக்க இராணுவத்தின் அசைக்க முடியாத தன்மை மற்றும் ஆணவத்தின் சிலையாகும் என்று காலிபாஃப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்தச் சின்னம் உலகில் முதன்முறையாகத் தாக்கப்பட்டது.

நேற்று, ஈரானின் மீது நடத்திய போர் நடவடிக்கைக்குப் பின்னர் ஒரு எஃப்-35 ரக ஜெட் விமானம் மத்திய கிழக்கில் உள்ள பிராந்திய அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.

அந்த ஜெட் விமானம் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அது உண்மையாக நிரூபிக்கப்பட்டால், தற்போதைய போரின்போது ஈரானால் தாக்கப்படும் முதல் அமெரிக்க ஜெட் விமானமாகவோ அல்லது எதிரித் தாக்குதலுக்கு உள்ளாகும் முதல் எஃப்-35 விமானமாகவோ இது அமையும்.

No comments