ஈரானிய ஆளில்லா விமானம் தாங்கி கப்பலைத் தாக்கியதாக அமெரிக்கா தெரிவிப்பு
ஈரானிய ஆளில்லா விமானம் தாங்கி கப்பலைத் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
"ட்ரோன் கேரியர்" என்று விவரிக்கப்படும் ஈரானிய கப்பலைத் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. அது இப்போது தீப்பிடித்து எரிகிறது என்று கூறியது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு இராணுவத் தாக்குதல் ஏழாவது நாளில் நுழைந்துள்ள நிலையில், "ஈரானிய கடற்படை முழுவதையும் மூழ்கடிக்கும் பணியில் அமெரிக்கப் படைகள் பின்வாங்கவில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த ட்ரோன் கேரியரை கிட்டத்தட்ட இரண்டாம் உலகப் போரின் விமானம் தாங்கிக் கப்பலின் அளவு என்று விவரித்தது.
தாக்குதல் எங்கு நடத்தப்பட்டது என்பது பதிவில் தெளிவாகத் தெரியவில்லை.
CENTCOM ஆல் வெளியிடப்பட்ட தாக்குதலின் காணொளியில், அமெரிக்காவால் தாக்கப்பட்ட பின்னர் ஈரானிய கப்பல் அடர்ந்த புகையில் மூழ்கியிருப்பதைக் காட்டியது.

Post a Comment