உங்கள் தரைப்படைகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் - ஈரான் வெளியுறவு அமைச்சர் அராச்சி


அமெரிக்க துருப்புக்களின் சாத்தியமான தரைவழி படையெடுப்பை எதிர்கொள்ள தனது நாடு தயாராக இருப்பதாகக் அமெரிக்க ஒளிபரப்பாளரான NBCக்கு அளித்த பேட்டியில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார்.

வரும் நாட்களில் ஈரானுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 

ஆனால் அது தெஹ்ரானில் தலைமையை கவிழ்க்கும் நோக்கில் ஒரு படையெடுப்பிற்கு தரைப்படைகளை அனுப்புவதை உள்ளடக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பெரும்பாலம் சிரியாவில் செயற்பட்ட குர்திஸ் போராளிகளை ஈராக்கில் நிலை நிறுத்தியுள்ள அமெரிக்கா. குர்த்திஸ் போராளிளை களமிறக்க வாய்ப்புள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இதனால் ஈராக் - ஈரான் எல்லையில் உள்ள காவல்துறை சாடிவகள் மற்றும இராணுவத் தளங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தி அழித்துள்ளன.

No comments