நான்காவது நாளாகவும் தெஹ்ரானில் கடுமையான தாக்குல்கள்!


ஈரான் தலைநகர் தெஹ்ரான் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் கடுமையான குண்டுவெடிப்புக்கு உள்ளானதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பார்டிஸ் புறநகர்ப் பகுதியில் சுமார் 12 ஏவுகணைகள் தாக்கியதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகருக்கு வெளியே உள்ள அல்போர்ஸ் மலைத்தொடரில் புகை மூட்டங்கள் எழும்பிய படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

எந்த இலக்குகள் தாக்கப்பட்டன. யார் தாக்குதல் நடத்தினர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இஸ்ரேலிய இராணுவம் எக்ஸ் பதிவில் தெஹ்ரான் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இராணுவ இலக்குகளுக்கு எதிராக ஒரே நேரத்தில் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறியது.

தலைநகருக்கு வெளியே உள்ள கராஜ் நகரத்திலும், நாட்டின் மையத்தில் உள்ள இஸ்ஃபஹானிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

No comments