ஈராக்கில் அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தியது எதிர்ப்புக் குழு? இல்லை என்கிறது அமெரிக்கா?
மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளனது. அதில் இருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. மற்ற இரண்டு பணியாளர்களைத் தேடும் முயற்சிகள் தொடர்கின்றன என்று அது கூறியது.
விபத்துக் குறித்து விசாணைகள் முன்னெடுக்கப்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க மத்திய கட்டளை வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், KC-135 விமானத்தின் இழப்பு எதிரியின் தாக்குதலில் இல்லை என்று கூறியது. மேலும் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் (GMT 19:00) விபத்துக்குள்ளானது என்றும் கூறியது.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் போது, இந்த சம்பவம் நட்பு நாட்டின் வான்வெளியில் நடந்ததாக CENTCOM கூறியது.
இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டிருக்கலாம் அல்லது நெருக்கமான சூழலில் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று பரிந்துரைத்தது. இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று அது கூறியது.
இருப்பினும், ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்குப் பொறுப்பேற்றது. மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ KC-135 விமானத்தை பொருத்தமான ஆயுதத்துடன் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது.

Post a Comment