வலி. தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு - அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாகவும் , அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படுவது தொடர்பில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர்கள் , எமது பிரதேச விளையாட்டுத்துறை சார்ந்தோர் , துறை சார் வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி முதல் கட்ட வரைவு தயார்ப்படுத்தப்பட்டுள்ளது
ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் கேள்வி கோரல்கள் நடைபெறும். தொடர்ந்து உள்ளக விளையாட்டரங்கு கட்டுமானங்கள் இடம்பெற்று , அடுத்த வருடம் பணிகள் நிறைவடைய வேண்டும் என உத்தேசித்துள்ளோம்.
விளையாட்டரங்கினுள் மேசைப்பந்தாட்டம் , வலைப்பந்தாட்டம் , கூடைப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம் (Badminton) கரப்பந்தாட்டம் போன்றவற்றுக்கான திடல்களும் , கரம் , சதுரங்கம் போன்றவற்றுக்கான பயிற்சி நிலையங்களும் அமைவதுடன் , சுமார் 1000 பார்வையாளர்கள் ஒரே தடவையில் அமர்ந்து போட்டிகளை கண்டுக்களிக்க கூடிய பார்வையாளர் இருப்பிடங்களுக்கு அமையவுள்ளன
அதோடு இணைந்து சிறுவர் பூங்காவும் , நீச்சல் பயிற்சிக்கான நீச்சல் தடாகமும் அமைக்கப்படும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

Post a Comment