படகு சேவை மீள ஆரம்பமாகியுள்ளது!



யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான படகு சேவை இன்றைய தினம் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் மீள ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் சேவை நிறுத்தப்பட்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கப்பல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது,

எனினும் காலநிலை மாறுபாடு மற்றும், டித்வா புயல் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக தொடரந்து தாமதமான நிலையில்  காலநிலை சுமூகமான நிலை திரும்பியதை தொடர்ந்து இன்று மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் படகு சேவையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று  காலை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து படகு சேவையை சுபம் கப்பல் நிறுவனத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.

1.30 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்ததுடன்  இதில் 77 பயணிகள் வருகை தந்தனர். மீள மதியம்  3 மணியளவில்  92  பயணிகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினத்தை நோக்கி படகு புறப்பட்டது.

வாரத்தில் செவ்வாய் தவிர்த்து ஏனைய 6 நாட்கள்  இரு மார்க்கத்திலும் தொடர்ந்து சேவையில் ஈடுபடவுள்ளது.

No comments