சீனாவிடம் தோற்றோம் : இந்திய வெளிவிவகார அமைச்சர்!



2017 ம் ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜிபூட்டியில் சீனாவின் முதலாவது வெளிநாட்டு இராணுவத் தளம் அமைக்கப்பட்டது. அதே காலப்பகுதியில் சர்ச்சைக்குரிய சூழலில் சுமார் 1.2 பில்லியன் டொலர் செலவில் 99 வருட குத்தகைக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பொறுப்பேற்றதென இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட சீனத் திட்டங்களைத் தடுக்க இந்தியா எடுத்த முயற்சிகளையும் மீறி சீனா அதில் வெற்றி பெற்றிருந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒரு சீன இராணுவத் தளமாக அடையாளப்படுத்தியதுடன், அது இந்தியப் பெருங்கடலில் வெளிநாட்டு இராணுவங்களின் அச்சுறுத்தல்மிக்க பிரசன்னத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் காலி கடற்பரப்பிற்கு அப்பால் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

தாக்குதலில் ஈடுபட்ட நீர்மூழ்கிக் கப்பல் யுஎஸ்எஸ் மினசோட்டா என பரவலாக நம்பப்படுகிறது. சர்வதேச செய்தி நிறுவனங்களின்படி, அதில் மூன்று ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரிகளும் அடங்கியிருந்தனர். எனினும், சில தரப்பினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது அமெரிக்க கடற்படையின் அதிவேக தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் சார்லட் எனத் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


No comments