ஈரான் ஒருபோதும் சரணடையாது - ஈரான் அதிபர்
மத்திய கிழக்குப் போர் இரண்டாவது வாரத்தினுள் நுழைந்துள்ள நிலையில், தெஹ்ரான் இஸ்ரேலுக்கோ அல்லது அமெரிக்காவுக்க ஒருபோதும் சரணடையாது என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார்.
சனிக்கிழமை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முன் பதிவு செய்யப்பட்ட காணொளியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈரானின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கான அழைப்புகள் அவர்கள் கல்லறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது என்று கூறினார்.
பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல்களை நடத்தி ஈரானின் உச்ச அயதுல்லா அலி கமேனியைக் கொன்ற பின்னர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நலன்களுக்கு எதிராக பிராந்தியம் முழுவதும், முக்கிய வளைகுடா நாடுகளில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது.
கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரான நிர்வகிக்கும் இடைக்கால தலைமைத்துவவ குழுவின் மூன்று உறுப்பினர்களில் பெஷேஷ்கியன் ஒருவர்.
தனது உரையில், பிராந்தியத்தில் ஈரான் தாக்குதல்களுக்கு அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டார் ஈரான் ஜனாதிபதி. தாக்குதல்கள் தங்கள் பிரதேசத்திலிருந்து தொடங்கப்படாவிட்டால் அவை குறிவைக்கப்படாது என்று கூறினார்.
ஈரானால் தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் என் சார்பாகவும், ஈரான் சார்பாகவும் நாய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரு கூறினார்.
சனிக்கிழமை அதிகாலை பஹ்ரைன், சவுதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ஸட வளைகுடா நாடுகளை ஈரானின் தாக்குதல்க குறிவைத்த நிலையில், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் ஈரன மீது தொடர்ந்த நிலையில் இந்த கருத்து வந்தன

Post a Comment