யாழில். அஸ்வெசும பயனாளிகளிடம் மோசடியில் ஈடுபடும் கும்பல் - அவதானமாக இருக்குமாறு பயனாளிகளுக்கு எச்சரிக்கை


யாழ்ப்பாணத்தில் அஸ்வெசும பயனாளிகளிடம் இணைய மோசடி ஊடாக பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் மாவட்ட செயலகம் கோரியுள்ளது. 

இது குறித்து மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில், 

அஸ்வெசும பயனாளிகளிடம் அநாமதேய தொலைபேசி அழைப்பு எடுத்து தங்களுக்கான கொடுப்பனவு  வழங்கப்படவுள்ளதாகவும், தங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு வரும் OTP இலக்கத்தினை தெரிவிக்குமாறு  கோருகின்றார்கள். 

அதன் உண்மைத் தன்மை அறியாத சில பொதுமக்கள் தொலைபேசிக்கு வரும் OTP இலக்கத்தினை தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுக்குரிய வங்கி கணக்கிலிருந்து இணையமூலம் பணம் களவாடப்படுகின்றன .

எனவே இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் தமது தொலைபேசி இலக்கத்திற்கு வரும் OTP இலக்கத்தினை ஏனையவர்களுக்கு பகிர்வதனை தவிர்க்குமாறும்  கோருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments