இத்தாலியில் டிராம் தடம் புரண்டதில் இருவர் பலி! 40 பேர் காயம்!


நேற்று வெள்ளிக்கிழமை மத்திய மிலனில் டிராம் தடம் புரண்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 40 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் தீயணைப்பு வீரர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மிலனில் செயல்பாட்டில் உள்ள புதிய மாடல்களில் ஒன்றான டிராம், நகரின் மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள விட்டோரியோ வெனெட்டோ தெருவில் தண்டவாளத்தை விட்டு விலகி ஒரு கடையின் சாரளத்தில் மோதியது.

மிலன் போக்குவரத்து நிறுவனமான ஏடிஎம், ஒரு அறிக்கையில் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்ததாகவும், காரணத்தைப் புரிந்துகொள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறியது.

No comments