மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு பயணம் செய்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24)

காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாருக்கு வருகை தந்தார்.

மன்னார் தள்ளாடி விமான ஓடு தளத்திற்கு வருகை தந்த குறித்த குழுவினர் மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம் செய்தனர்.

 சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணானந்த குருக்கள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.

பின்னர் இக்குழுவினர் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதோடு ஆலயத்தின் சுற்றுப்புறங்களையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments