மட்டக்களப்பில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம் - இடியப்பம் விற்ற மூதாட்டி உயிரிழப்பு ; மூவர் படுகாயம்


மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரண்டு காட்டுயானைகளில் ஒன்று இடியப்பம் விற்றுக்கொண்டு வந்த 68 வயது மூதாட்டியை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை 2 காட்டுயானைகளும்  மேற்கொண்ட தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த காட்டுயானைகளை காட்டிற்கு விரட்டியடித்துள்ளனர்.

No comments